அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை வழங்க முடியாது – இன்டர்போல் !

சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடியின பிரதான சந்தேகநபரான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனிடம் பிடியாணை ஒப்படைக்க முடியாதென பரிஸ் இன்டர்போல் நிராகரித்துள்ளது.
பிடியாணைகளை ஒப்படைப்பது பிரான்ஸ் நாட்டு இன்டர்போல் சட்டத்திற்கு உட்பட்டவை அல்லவென குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அர்ஜுன் மகேந்திரன் இலங்கை பொலிஸாருக்கு தேவைப்படும் நபர் என அந்நாட்டு பொலிஸார் இன்னமும் பரிஸ் இன்டர்போல் பொலிஸாரிடம் அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தொடர்பான அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்பட்ட ஆவணம் ஒன்று கிடைத்த பின்னரே தாம் சிவப்பு எச்சரிக்கை விடுப்பதாக பரிஸ் இன்டர்போல் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இன்றுமுதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் அனுஷ்டிப்பு!
மாகாணசபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் !
வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதில் தாமதம் - தடை செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் பாவனையில் - சுற்றாடல்...
|
|