அரைவாசி கட்டணத்தையே அறவிட தீர்மானம் – அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!
Wednesday, May 13th, 2020ஏப்ரல் மற்றும் மே மாத்திற்கான பாடசாலை வான் போக்குவரத்து கட்டணத்தின் அரைவாசி அல்லது பெற்றோருக்கு முடியுமான அளவு கட்டணத்தை அறவிடுவதங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் பிரதிநிதிகள், அகில இலங்கை பாடசாலைப் போக்குவரத்து சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறாத போதிலும், சிறிதளவு கட்டணத்தையேனும் அறவிடாத பட்சத்தில் தாம் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் கமல் இலங்கரத்ன தெரிவித்துள்ளார்
குறித்த மாதங்களில் பாடசாலைகள் இடம்பெறாத நிலையில், வான் போக்குவரத்து கட்டணத்தை அறவிட வேண்டாம் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியிருந்த நிலையில், அதனை அறவிடாத பட்சத்தில் வான் உரிமையாளர்கள் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, அமைச்சருடன் கலந்துரையாடி கட்டணத்தின் அரைவாசி அல்லது பெற்றோருக்கு முடியுமான அளவு கட்டணத்தை அறவிடுவதங்கு தீர்மானித்ததாக மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் கமல் இலங்கரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|