அருட்கலாநிதி ஜோசப் குணாளன் தியாகராஜாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !

IMG-20180411-WA0006 Wednesday, April 11th, 2018

காலஞ்சென்ற அமரர் வணபிதா ஜொசப் குணாளன் தியாகராஜா அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.

கொழும்பு தெகிவளை ரேமன்ஸ் மலர்ச்சாலையில் மக்களின் அஞ்சலி மரியாதைக்காக அன்னாரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள நிலையில்  இன்றையதினம் (11) குறித்த மலர்ச்சாலைக்குச் சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வேலணையை பிறப்பிடமாகவும் கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட அருட்தந்தை குணாளன் தியாகராஜா பேரருட்திரு டானியல் தியாகராஜா அவர்களின் சகோதரர் என்பதுடன் யாழ் மத்திய கல்லூரியின்யின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


சுங்கக் கட்டளைச் சட்டத்தில் மாற்றம்?
அடுத்த வாரம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகுறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
இலங்கையின் 45வது பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்!
பேருந்துகளுக்கான தனி ஒழுங்கை அறிமுகப்படுத்தும் திட்டம் இடை நிறுத்தம்!
வித்தியா படுகொலை வழக்கின் தொடர் வழக்கு விசாரணை நாளை ஆரம்பம் !
30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…