அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்துங்கள்: மக்களுக்காக அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்!

Monday, March 23rd, 2020

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப் பகுதியிலும் மக்கள் தமது அத்தியாவசிய கடமைகளை முன்னெடுக்க கூடிய வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதற்கமைய அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமது அத்தியாவசிய தேவைகள் குறித்து அறிவித்ததன் பின்னர் அத்தியாவசிய பொருட்களை கொண்டுச் செல்ல முடியும்.

அதேபோல் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் நபர்கள் தத்தமது பணியிடங்களுக்கு செல்வதற்கான இயலுமை உள்ளது.

மேலும் நாட்டின் எந்தவொரு பகுதியில் இருந்தும் பொருளாதார மத்தியநிலையங்களுக்கு மரக்கறிகளை கொண்டுவரவும், கொண்டுச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய தம்புளை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று அதிகாலை 4 மணிமுதல் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை தேவையான அளவு மரக்கறி வகைகளை பெற்றுக்கொள்ள நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் மற்றும் நுவரெலிய மாவட்ட செயலகம் ஆகியவற்றை தொடர்பு கொள்ள முடியும் என மாவட்ட செயலாளர் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Related posts:

ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவனாதனின் சிறப்புரிமையை அவமதித்த இராஜாங்க அமைச்சர் விஜயகல...
மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திற்கு உ...
நவம்பர் 1 முதல் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாய...