அரியாலை யாழ். இசை சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

அரியாலை யாழ் இசை சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் தளபாடங்கள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் பிரகாரம் குறித்த சனசமூக நிலையத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஒதுக்கீடு செய்திருந்த நிதியின் மூலமே தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த தளபாடங்களை நேற்றையதினம் (03) ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் முன்னாள் நல்லூர் பிரதேசசபையின் எதிர்க்கட்சித்தலைவர் அம்பலம் இரவீந்திரதாசனால் யாழ். இசை சனசமூக நிலைய நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக உறுப்பினர் திருமதி.ஜெ.தயாழினி உடனிருந்தார்.
Related posts:
2016ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இருவாரத்தில் வெளிவரும்!
புத்தக பையின் எடையை குறைப்பதற்காக விசேட திட்டம்!
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரின் சகோதரர் பசில் வெளியேறுவதற்கு உதவவில்லை – இந்தியா மறுப்பு...
|
|