அரியாலை முள்ளி யாழ் இசை சனசமூக நிலைய பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தீர்வு!

Friday, December 21st, 2018

அரியாலை முள்ளி யாழ் இசை சனசமூக நிலைய பகுதி மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி மக்கள் தமது பிரதேசத்தில் உள்ள பாழடைந்து காணப்பட்ட கிணற்றை புனரமைத்து தமது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மக்களது குறித்த கோரிக்கையை கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசன் கொண்டுசென்றிருந்தார்.

இந்நிலையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது 2018 ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த கிணறு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனூடாக குறித்த பகுதி மக்கள் இதுவரை நாள் எதிர்கொண்டுவந்த குடிநீருக்கான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: