அரியாலை முள்ளி பகுதி மக்களது குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தீர்வு!

Sunday, February 24th, 2019

அரியாலை, முள்ளி பகுதி மக்களது வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதி மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சினைக்கான தீர்வை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிறைவுசெய்து கொடுத்துள்ளது.

குறித்த பகுதி மக்கள் தமது பகுதிக்கான குடிநீரை பெற்றுக்கொள்வதில் பல அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டு வருவதால்  தமது பகுதியில் பொதுக் கிணறு ஒன்றை அமைத்து தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த பிரச்சினை தொடர்பில் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திதாசன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்ததுடன் அப்பிரச்சினையின் முக்கியத்துவம் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கும் கொண்டுசென்றிருந்தனர்.

இதனடிப்படையில் மக்களின் அடிப்படைத் தேவைகள் உடனடியாக நிறைவு செய்து கொடுக்கப்பட வேண்டும் என்ற கட்சின் நிலைப்பாட்டிற்கு அமைய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த பகுதி மக்களது குடிநீருக்கான தீர்வாக கிணறு ஒன்று புனரமைக்கப்பட்டு மக்களது பாவனைக்காக வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திதாசன் மற்றும் கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: