அரியாலை மத்தி – தெற்கு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அவதானம்!
Monday, July 23rd, 2018
அரியாலை மத்தி – தெற்கு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டுள்ளது.
கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் குறித்த பகுதி மக்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக நேரில் சென்று மக்களது பிரச்சினைகள் தொடர்பில் அவர் ஆராய்ந்தறிந்ததுடன் குறித்த பகுதியின் கட்சியின் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது குறித்த பகுதி மக்கள் தமது வாழ்வாதார தேவைப்பாடுகள் தொடர்பில் இரவீந்திரதாசனுக்கு தெரிவித்திருந்ததுடன் அவற்றுக்கு தீர்வுகண்டுதருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மக்களது கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய இரவீந்திரதாசன் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு குறித்த விடயங்களை கொண்டுசென்று தீர்வுகளைப் பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|