அரியாலை மணியம் தோட்டம் பகுதியில் ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் கட்சிக் காரியாலயம் திறந்துவைப்பு!

நல்லூர் பிரதேச மக்களுடனான தொடர்பாடல்களை இலகுபடுத்தும் முகமாக அரியாலை மணியம் தோட்டம் பகுதியில் ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் கட்சிக் காரியாலயம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரி அலன்ரின் (உதயன்) கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் மற்றும் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் ஆகியோர் குறித்த காரியாலையத்ததை இன்று காலை (25) நாடாவெட்டித் திறந்துவைத்துள்ளனர்.
அரியாலை மணியம் தோட்டம் 9ஆம் குறுக்குத் தெருவில் குறித்த அலுவலகம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது. இதன்போது குறித்த பிரதேசத்தின் கட்சி செயற்பாட்டாளர்கள் கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்!
பரீட்சைத் திணைக்களத்தின் பிரச்சினைக்கு காரணம் என்ன?
வழமைக்கு திரும்பிய பொது போக்குவரத்து -தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
|
|