அரியாலை பகுதி  மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் நேரில் சென்று ஆராய்வு!

Thursday, November 29th, 2018

அரியாலை நாவலடி அம்மன் வீதி மக்கள் தாம் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியாலை நாவலடி அம்மன் வீதி பகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறியும் முகமாக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் குறித்த பகுதிக்கு சென்று மக்களது நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். இதன்போதே குறித்த பகுதி மக்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தனர்.

இதன்போது குறித்த பகுதி மக்கள்  தமது பகுதியில் வீட்டுத்திட்டம்,வீதி புனரமைப்பு.  மலசலகூடம், சுகாதார வசதிகுறைபாடு, வாழ்வாதார உதவிகள், உள்ளிட்ட பிரச்சினைகள் காணப்படுவதாகவும் இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் அம்பலம் இரவீந்திரதாசனிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

மக்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட இரவீந்திரதாசன் அவை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

460bf90b-239e-4589-a21e-9111276b6aa2 0849e0ce-a76c-47ed-a669-a7dc24087434 2285584e-c1b5-4c06-9e18-25bc95ee1df8 b701aeb0-b1e8-4202-ac4c-504562f9075a

Related posts: