அரியாலை துப்பாக்கிச் சூடு: குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் சென்றது விசாரணைகள்!

Sunday, October 29th, 2017

அரியாலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான விசாரணைகளை இன்று (28) முதல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொள்வார்கள் என யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜித குணரட்ண தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இதுவரையில் யாழ். பிரதி பொலிஸ் மாஅதிபரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

Related posts: