அரியாலையில் கண் வைத்தியசாலை – மதிப்பீட்டறிக்கை அரசுக்கு அனுப்பி வைப்பு!

Thursday, April 11th, 2019

அரியாலையில் சுமார் 1000 மில்லியன் செலவில் கண் வைத்தியசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் பாலேந்திரா என்பவர் அரியாலைப்பகுதியில் உள்ள தனது இரண்டரை ஏக்கர் காணியை கண் வைத்தியசாலை அமைப்பதற்காக அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அக்காணியின் உரிமம் யாழ். போதனா வைத்தியசாலையின் பெயரில் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

இக்காணியில் கண்வைத்தியசாலை அமைப்பதற்கு 1000 மில்லியன் ரூபா நிதி தேவையென மதிப் பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டு முன்மொழிவை அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ளோம் எனவும் மருத்துவர் சத்திமூர்த்தி கூறியுள்ளார்.

இதே வேளை, யாழ்ப்பாணத்தில் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கான காணி பெறப்பட்டு தற்போது அங்கு சுற்றுமதில் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த வைத்தியசாலைக்கான 5 பில்லியன் ரூபா திட்ட வரைவு அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் சிறுவர் வைத்தியசாலைக்கான ஆரம்பகட்ட வேலைகள் 100 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படும் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த வைத்தியசாலை கட்டுமாண வேலைகளை மத்திய பொறியியல் பிரிவு மேற்கொள்ளவுள்ளது.

Related posts: