அரிசி வகைகளுக்கான உச்ச நிலை சில்லறை விலைகள் நிர்ணயிப்பு!

Monday, February 18th, 2019

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி ஆகியவற்றுக்கான உச்ச நிலை சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக
விவசாயத்துறை அமைச் சர் அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

நெல் ஆலை உரிமையாளர்களும் விவசாய அமைச்சும் இது தொடர்பான இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும், இதற்கமைய நாட்டரிசி 1Kg 80 ரூபா மற்றும் சம்பா அரிசி 1Kg 85 ரூபா என்ற உச்ச நிலை விலைகளுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நாட்டரிசி நெல் 1Kg ஒன்று 38 ரூபாவிற்கும் சம்பா நெல் 1Kg ஒன்று 41 ரூபாவிற்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: