அரிசி மூலம் மதுபானம் : வர்த்தமானியை இரத்து செய்யுமாறு வலியுறுத்தல்!

கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் திகதி, நிதி அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, அரிசியைப் பயன்படுத்தி மதுபானம் உற்பத்தி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, அரிசி, சோளம் மற்றும் பழ வகைகளைப் பயன்படுத்தி ஸ்பிரிட் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுவரி கட்டளைச்சட்டத்தின் கீழுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நிதி அமைச்சர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். எவ்வாறாயினும், தற்போது உள்நாட்டு சந்தையில் ஒரு கிலோ அரிசி, 100 ரூபாவைத் தாண்டியுள்ளது.
மதுவரித் திணைக்களத்திடம் இந்த விடயம் தொடர்பில் நாம் வினவினோம். ஸ்பிரிட் உற்பத்தி பயன்படுத்தப்படும், தேங்காய் சார்ந்த உற்பத்தி குறைவடைந்துள்ளமையாலேயே, இந்தத் தீர்மானத்திற்கு வந்ததாக திணைக்களம் குறிப்பிட்டது.
Related posts:
எம்.பி.க்களுக்கு தமிழ் தெரிந்திருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்! அமைச்சர் மனோ கணேசன்!
கர்ப்பிணிப் பெண் படுகொலை : கணவருக்கும் அயலவருக்கும் நீதிமன்றம் உத்தரவு!
செப்டம்பர் 20 ஆம் திகதிமுதல் 6 மாதங்களுக்குள் உள்ளூட்சித் தேர்தலை நடத்த முடியும் – தயாராகி வருவதாக த...
|
|