அரிசி நுகர்வு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

Thursday, July 19th, 2018

நாட்டு மக்களின் அரிசி நுகர்வில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் பொழுது தனிநபர் அரிசி நுகர்வானது 46 கிலோ கிராமினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
2010ஆம் ஆண்டில் ஆண்டொன்றில் தனிநபர் ஒருவரின் அரிசி நுகர்வு 152 கிலோ கிராமாக காணப்பட்டது. தற்பொழுது தனி நபர் ஒருவரின் சராசரி அரிசி நுகர்வு 106 கிலோ கிராமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, கோதுமை மாவின் நுகர்வு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கியின் அறிக்கையொன்றின் அடிப்படையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அரிசி நுகர்வின் வீழ்ச்சியானது எதிர்காலத்தில் நாட்டின் விவசாயத்தை பாதிக்கும் என அகில இலங்கை விவசாய சமூக சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

Related posts:


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச நாளை பதவியேற்பு!
ஜப்பானின் உதவியுடன் சேதன பசனை தயாரிக்கும் தொழிற்சாலை வடமராட்சியில் - எதிர்வரும் ஞாயிரன்று அதிகாரபூர...
சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை துரிதப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர்...