அரிசி தட்டுப்பாட்டின் பின்னனியில் பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குற்றச்சாட்டு!

Friday, September 10th, 2021

பாரியளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் அரிசியை சேமித்து வைத்திருந்ததால், சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விலை அதிகரிப்பிற்கும் வழிவகுத்தது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையில் அரிசி கையிருப்பை விற்பனை செய்வதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகவும் அமைச்சர் குறடறதட சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் விலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது, ஆனால் அவை தோல்வியுற்றன, இதனால் பொதுமக்கள் ஒரு கிலோகிராம் நாட்டு அரிசிக்கு ரூபா 120 மற்றும் சம்பா ஒரு கிலோகிராமிற்கு ரூபா 150 செலுத்த வேண்டியிருந்தது.

ஒரு கிலோகிராம் நாட்டு அரிசியை 98 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 103 க்கும் விற்பனை செய்ய நெல் ஆலை உரிமையாளர்களுடன் அரசாங்க மானது ஒப்பந்தம் செய்துள்ளது.

இதேவேளை பறிமுதல் செய்யப்பட்டுள்ள அரிசியை சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: