அரிசி – சிமெந்து தட்டுப்பாட்டுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Friday, November 5th, 2021

அடுத்த இரண்டு வாரங்களுக்குள், அரிசி மற்றும் சிமெந்து தட்டுப்பாட்டுக்குத் தீர்வைப் பெற்றுத்தருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த 65 ரூபா விசேட பண்ட தீர்வை வரியை, 25 சதமாகக் குறைத்து, தனியார் துறைசார் எந்தவொரு தரப்பினருக்கும் அரிசியை இறக்குமதி செய்ய நிதி அமைச்சர் இடமளித்துள்ளார்.

சந்தையில் அரிசி விலையைக் குறைப்பதற்கு இதனூடாக எதிர்பார்க்கப்படுகிறது. ஓரிரு வாரங்கள் ஆகும்போது, தட்டுப்பாடின்றி அரிசி விநியோகிக்கப்படும்.

அதேநேரம், அடுத்த வாரம் முதல் தட்டுப்பாடின்றி சிமெந்தை இறக்குமதி செய்ய இடமளிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் ஒதுக்கத்தை வழங்கவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: