அரிசி களஞ்சியசாலைகளை பரிசோதனையிடும் நடவடிக்கை ஆரம்பம்!

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள அரிசி களஞ்சியசாலைகளை பரிசோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
சந்தையில் நிலவக்கூடிய அரிசி தட்டுப்பாட்டை இல்லாது செய்வதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் அரிசிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டதை அடுத்து வர்த்தக நிலையங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் அரிசி களஞ்சியப்படுத்தும் அனைத்து இடங்களையும் சோதனையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.இதனிடையே நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் சுற்றிவளைப்புகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சாட்சிய பதிவுகளுக்கு ஊடகங்களை அனுமதிப்பதில்லை - நாடாளுமன்ற தெரிவுக்குழு!
நாடளாவிய ரீதியில் 70 தாதியர்களுக்கு கொரோனா !
சதொச நிறுவன ஊழல் மோசடி தொடர்பான ஆவணங்கள் தயார் – ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் வழங்கத் தயார் - நுகர்வ...
|
|