அரிசி இறக்குமதிக்கு பிரதமர் உத்தரவு!

Saturday, December 9th, 2017

ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை உடனடியாக இறக்குமதி செய்யுமாறு  பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நிதி இராஜாங்கஅமைச்சர் இரான் விக்கிரமரட்ன குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்தைக்குப் பின்னர்  சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு இருக்க கூடாது எனபிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரிசியின் விலையை சந்தைகளில் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அரிசியை பதுக்கி தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என்றும் இவ்வாறு செயல்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வர்த்தகர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.


பல்கலைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள மாணவர்க்களுக்கான கடிதங்கள் அனுப்பி வைப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்!
சைட்டம் கல்லூரி: புதிதாக மாணவர்களை இணைத்துக்கொள்வது இடைநிறுத்தம்!
8 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!
மீண்டும் 5900 இராணுவ வீரர்கள் சேவையில்!