அரிசி இறக்குமதிக்கான வரிச்சலுகை நீடிப்பு!

Sunday, April 2nd, 2017

அரிசி இறக்குமதிக்கான வரிச்சலுகையை மே மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்தது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இந்த வரிச்சலுகையானது நேற்றைய தினத்துடன் (31) முடிவுக்குக் கொண்டுவரப்படவிருந்தது.

இதனூடாக இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் அரிசிக்கு விசேட வர்த்தகப் பொருளுக்கான வரியாக 5 ரூபா மாத்திரமே அறிவிடப்பட்டது.

வரிச்சலுகைக்கு முன்னர் தீர்வை வரி உள்ளிட்ட பல வரிகள் உள்ளடக்கப்பட்டு ஒரு கிலோகிராம் அரிசிக்கு 50 ரூபா இறக்குமதி வரி அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: