அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்!

Tuesday, February 12th, 2019

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று(12) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அரச கொள்கைகளுக்கு அமைவாக அனைவருக்கும் உயர்ந்தபட்ச சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த துறைகளில் வீழ்ச்சியடைந்துள்ளோரை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே அரச கொள்கைகளுக்கு அமைவாக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி சொந்தவிடத்தில் ஆரம்பம்
ஐ.எஸ் தொடர்பில் புல­னாய்வு பிரிவு அதிக கவனம்  -  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் !
தையல்கடை மீது விசமிகளின் தாக்குதல்!
எதிர்வரும் சனிக்கிழமை வரை மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்லவேண்டாமென எச்சரிக்கை!
இலங்கையில் புதிய மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கத் திட்டம்!