அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021

அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, அரிசி ஆலை உரிமையாளர்கள் சுதந்திரத்தை சுரண்டினால் அரசாங்கம் நேரடியாக தலையிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

அரிசி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவோடு அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கு புதிய விலையை அறிவித்தனர்.

இந்நிலையில் நுகர்வோரைப் பாதுகாக்கும் முயற்சியில் ஏதேனும் அநியாயம் நடந்தால், அரசாங்கமும் நுகர்வோர் விவகார அதிகாரசபையும் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்.

அமைச்சரவை முடிவின் அடிப்படையில் வர்த்தக அமைச்சின் தலையீட்டின் மூலம் 100 ஆயிரம் மெட்ரித்தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதுடன், இது மலிவு விலையில் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அனைத்து அமைச்சுக்களிலும் கொரோனா ஒழிப்பு குழு - அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு சுகாதார அமைச்சர் ஆலோச...
தேயிலை, நெல், சோள செய்கையாளர்களுக்கு யூரியா பசளையை பகிர்ந்தளிக்க நடவடிக்கை - பெருந்தோட்ட கைத்தொழில் ...
அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் கடுமையான கட்டுப்பாடு - யாழ் மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ...