அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

edf9dfa4882e8c37791fe0cba34ef460_XL Monday, July 17th, 2017

உள்நாட்டு சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் 55 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை பாகிஸ்தான் மற்றும் மியன்மார் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த அரிசி இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும். சில மோசடி வர்த்தகர்கள் அரிசியை பதுக்கி அரிசி தட்டுப்பாடு உள்ளதாக கூறுவதற்கு முயற்சித்து வருகின்றனர். பாவனையாளர்களுக்கு இதன்மூலம் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் கூறினார்.

இறக்குமதி செய்யப்படவுள்ள அரிசி பாவனைக்கு பொருத்தமான  என்பதை பரிசோதிப்பதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் சித்தங்க லொக்குஹெட்டி தலைமையிலான ஒரு குழு அண்மையில் பாகிஸ்தான் மற்றும் மியன்மார் நாடுகளுக்கு விஜயம் செய்தது.

இந்த அரிசி இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும். சில மோசடி வர்த்தகர்கள் அரிசியை பதுக்கி அரிசி தட்டுப்பாடு உள்ளதாக கூறுவதற்கு முயற்சித்து வருகின்றனர். பாவனையாளர்களுக்கு இதன்மூலம் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!