அரிசியை இறக்குமதி செய்யும் அவசியம் கிடையாது!

Monday, July 31st, 2017

தற்போதைய சூழலில் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யும் அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மரதகஹமுல அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது

அரசியின் அளவு மற்றும் தேவை குறித்து சரியான தகவல்கள் இல்லாத காரணத்தினால் சிக்கலான நிலை தோன்றியுள்ளதாக சங்கத்தின் தலைவர் பி.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், இலங்கையில் தற்போதைய அரிசி கையிருப்பை கருத்தில் கொண்டு, நான்கு நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தொழிற்துறை மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது

குறித்த அரிசி தொகை சத்தோசவின் ஊடாக இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts: