அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – நிதி அமைச்சர்!

Monday, February 13th, 2017
அரிசி விற்பனை நிலைமை குறித்து ஆராய நாட்டின் பல பகுதிகளுக்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.

சிலாபத்தில்  நேற்று இடம்பெற்ற நிகழ்விலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அங்கு குறிப்பிட்டார்.

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான விசேட தீர்வொன்று விரைவில் வழங்கப்படும் அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கிய அனுகூலங்கள் உரிய முறையில் பொதுமக்களை சென்றடையாவிட்டால் அது விடயத்தில் அரசாங்கம் தலையிட நேரிடும் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

c5ab99bdcebe5f31e1bcecf6a2839034_XL