அரிசியை அதிக விலைக்கு விற்றால் 1 இலட்சம் ரூபா அபராதம் – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
Wednesday, July 21st, 2021அதிக விலைக்கு அரிசியை விற்கும் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நெல் மற்றும் அரிசியின் விலை எதிர்காலத்தில் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நெல் மற்றும் அரிசியின் விலைகளை தனி நபர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் தமது விருப்பப்படி தீர்மானிக்க அனுமதிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அடுத்த இரு வாரங்களில் அனைத்து ஆலை உரிமையாளர்களுடனும் நெல் மற்றும் அரிசியின் விலை குறித்து ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வதற்கான 2500 ரூபா அபராதம் ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படுவதுடன் உற்பத்தி செய்யப்படும் அரிசியை அதிக விலையில் விற்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|