அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கான வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, June 22nd, 2021

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன  முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அண்மையில் உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையால் அதை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன. ஆனாலும் அவை கைகூடாத நிலையில் அரிசியை இறக்கமதி செய்வதனூடாகவெ அதை கட்டுப்படுத்த முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன  யோசனை ஒன்றை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.

இந்நிலையிலேயே வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் குறித்த யோசனை  அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: