அரிசிக் களஞ்சியசாலைகள் பரிசோதனை!

அரிசிக்கான விலை நிர்ணயத்தை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் அரிசி களஞ்சியசாலைகளை பரிசோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
சந்தையில் நிலவக்கூடிய அரிசி தட்டுப்பாட்டை இல்லாது செய்வதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு ள்ளது. அரசாங்கத்தினால் அரிசிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டதை அடுத்து வர்த்தக நிலையங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்ப டக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் அரிசி களஞ்சியப்படுத்தும் அனைத்து இடங்களையும் சோதனையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.
இதனிடையே நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் சுற்றிவளை ப்புகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் உலகின் முதல்தர நட்சத்திர விடுதிகள்!
சுதந்திர தின நிகழ்வில் இராணுவ பதக்கத்துடன் கலந்து கொண்ட ஜனாதிபதி!
அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைமுதல் 2 ஆம் தவணை விடுமுறை - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|