அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது – அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை – விவசாய திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023

நாட்டில் இந்த வருடம் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், நெற்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக பல்வேறு பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அண்மைய நாட்களாக நாட்டின் ஒரு சில பாகங்களில் உள்ள வயல் நிலங்களில் நெற்கதிர்கள் மஞ்சல் நிறத்தில் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

நெற்கதிர்களில் ஏற்படும் பொற்றாசியம் பற்றாக்குறையே இதற்கு காரணம் என விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான நோய் நிலமைகளில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்கு, உரிய முறையில் சரியான நேரத்தில் உரமிடப்படுவது கட்டாயமாகும்.

எனினும், உரம் கிடைப்பதில் ஒரு சில இடங்களில் தாமதம் நிலவுவதால், இவ்வாறான நோய் நிலமைகள் எற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நீடித்தால் பாரிய விழைவு ஏற்படும் - சுகாதார பிரிவு எச்சரி...
மில்கோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம் - பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் திட்டம் நா...
பேர்லின் சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாடு த...