அரிசிக்கான விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு – அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது.
கொழும்பு – புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தைக்கு இன்று புதன்கிழமை முற்பகல் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டபோது வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் நிர்ணயம் செய்யப்படும் அதிகபட்ச சில்லறை விலைக்கு அமைய, மொத்த விற்பனையாளர்களுக்கு அரியை விநியோகிக்க முடியும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன்போது கருத்து தெரிவித்த மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், மொத்த விற்பனை நிலையங்களுக்கு செல்பவர்கள் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈ.பி.டி.பியின் யதார்த்த அரசியல்அணுகு முறையேஎமது மக்களின் எதிர்காலத்தை பலமானதாக கட்டியெழுப்பும் - உன்...
வங்கிக் கணக்கிலிருந்து 1.9 மில்லியன் ரூபாய் மோசடி - ஐந்து பெண்கள் கைது!
விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் 10 நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் - புவிசரிதவியல் ம...
|
|