அரிசிக்கான அபராதம் தொடர்பான அவசர சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றவர்களுக்கான அபராதத் தொகையை 100 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான சட்டமூலம், அவசர சட்டமூலமாக நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கு அமைச்சரவை இரண்டு தடவைகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் கறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இந்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சட்டமா அதிபரின் அங்கீகாரத்தின் பின்னர் அது அவசர சட்டமூலமாக நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
எதிர்வரும் 4ஆம் திகதி எஞ்சியுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு !
உயர்தர மாணவர்கள் தமிழ்மொழியை கற்கும் ஆர்வம் அருகி வருகிறது - பேராசிரியர் மனோன்மணி!
தேவையற்ற அச்சம் வேண்டாம் - கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள...
|
|