அராலி – சங்கானை வீதியில் ஒருவர் வெட்டிப் படுகொலை!

Monday, July 25th, 2016

அராலி சங்கானை வீதி ஓடக்கரை பகுதியில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்றுகாலை(25) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அராலி கிழக்கைச் சேர்ந்த குணரத்தினம் என்ற நபரே இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

ஓடக்கரை வீதி வயல் வெளிப்பகுதியில் குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது எனவும் குறித்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: