அரபு மொழியிலுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்றுநிருபம் வெளியீடு!

Tuesday, June 11th, 2019

அரபு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்று நிருபம் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாகத் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக இவ்வாறான பெயர்ப்பலகைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொது கொள்கையின் அடிப்படையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுக்கு மேலதிகமாக சந்தர்ப்பம் இல்லை.

ஏனைய மொழிகளில் பெயர்ப்பலகைகளைக் காட்சிப்படுத்துவதற்கு அது தொடர்பான விஷேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: