அரச வைத்திய சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!

Wednesday, July 26th, 2017

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்

அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் நேற்று (25) நடத்திய பேச்சுவார்த்தையின் போது தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தள்ளார்

மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பட்டாளர் ரயன் ஜயலத்தை கடத்திச்செல்வதற்கு முற்பட்டமை தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது கூறியதாக டொக்டர் சமந்த ஆனந்த தெரிவித்தார்.

Related posts: