அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு ஒரு கொள்கையில்லை!

Saturday, February 4th, 2017

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பெயரை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான வேலைத்திட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் தொடர்பில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடந்த அரசாங்க காலத்தில், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாக அமைச்சர் இங்கு கூறினார்.

பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டை ஏற்றுக் கொண்டாலும், கொள்கை ஒன்று இல்லாத அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் இங்கு கூறினார்.

இதேவேளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தம் நண்பகல் 12.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது. வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நாடு பூராகவுமுள்ள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் பாதிப்படைந்திருந்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா கூறினார்.  வைத்தியசாலைகளுக்கு வருகை தந்திருந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்ததாக அத தெரண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

1246086280Rajitha

Related posts: