அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படவுள்ள அம்புலன்ஸ்கள்!

Thursday, January 17th, 2019

நாடு முழுவதும் உள்ள 132 வைத்தியசாலைகளுக்குத் தேவையான அம்புலன்ஸ்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

சுகாதார போசணைகள் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் இங்கிலாந்தின் கழசன நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட 132 அம்புலன்ஸ்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்துக்காக 250 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மாகாண சபை மருத்துவமனைகளுக்கு 103 அம்புலன்ஸ்களும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு 27 வண்டிகளும் ஆயர்வேத திணைக்கள மருத்துவமனைகளுக்கு 2 அம்புலன்ஸ்களும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என சுகாதார அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை இதற்கு மேலதிகமாக ஜேர்மனியின் பென்ஸ் நிறுவனம் தயாரித்த 100 அம்புலன்ஸ்களும் விரைவில் மருத்துவமனைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. ஏற்கனவே 40 அம்புலன்ஸ்கள் மருத்துவமனைகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related posts:

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் பிளாஸ்ரிக், பொலித்தீன் கொண்டு  செல்லத் தடை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்...
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தில...
கிராமிய மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கிக் கொடுக்காமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது - ஜ...