அரச வைத்தியசாலைகளில் கட்டாயமாக நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ல்ஸ் வலியுறுத்து!

Tuesday, October 31st, 2023

அரச வைத்தியசாலைகளில் கட்டாயமாக நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ல்ஸ் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெறுகின்ற இலவச கண் புரை சத்திர சிகிச்சை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

இன்றையதினம் வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவுக்கு வருகைதந்த போது வழமையாக அரச வைத்தியசாலைகளில் ஒருவித துர்நாற்றம் காணப்படும் ஆனால் இன்று அதை உணரவில்லை. இது ஒரு தனியார் வைத்தியசாலை போல காட்சி அளிக்கின்றது. இங்கே அனைத்து விடயங்களும் தனியார் வைத்தியசாலை போல காணப்படுகின்றது இதனை பார்க்கும்போது வியப்பாக இருந்தது.

எனவே இதனை செயல்படுத்துகின்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பார் மற்றும் கண் சிகிச்சைக்கு பொறுப்பான வைத்திய நிபுணர் மலரவன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: