அரச முகாமை உதவியாளர் போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியீடு!

Saturday, December 30th, 2017

அரச முகாமை உதவியாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

திறந்த போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் விரைவில் வெளியாகும். இந்தப் பரீட்சைகளுக்கு மொத்தம் 68 ஆயிரத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றினர். இவர்களுள்ஆயிரத்து 377 பேருக்கு நூற்றுக் நூறு புள்ளிகள் கிடைத்திருப்பதாக அமைச்சின் அரச கூட்டுச் சேவைப் பணிப்பாளர் நாயகம் கே.வீ.பீ.எம்.ஜீ.கமகே தெரிவித்துள்ளார்.

தற்போது அரச முகாமைத்துவ சேவையில் ஆறாயிரத்து 139 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதனை நிரப்புவதற்கான அனுமதி திறைசேரியிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. அடுத்த வருட முதற்காலாண்டுப் பகுதிக்குள் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: