அரச மற்றும் தனியார்துறை பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச கோரிக்கை!

Friday, May 8th, 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து அரச மற்றும் தனியார்துறை பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது என்று கொரோனா ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்

ஜனாதிபதி செயலணி புதிய வர்த்தக முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். ஏற்கனவே பாரிய, மத்திய மற்றும் சிறிய வர்ததகங்களுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உரிய ஒழுங்கு விதிகளின்படி தனியார்துறையினர் எதிர்வரும் 11ஆம் திகதியன்று தமது பணிகளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும் என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதைய பொருளாதார சூழ்நிலையிலும் பணியாளர்களை பணியிலிருந்து நீக்குதல் மற்றும் சம்பளக் குறைப்பு மேற்கொள்ளல் என்பனவற்றுக்கு அனுமதியளிக்கப்படாது என தொழில் அமைச்சின் செயலாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் முத்தரப்பு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கங்கள், தொழில்தருனர் மற்றும் தொழில் திணைக்களம் ஆகிய மூன்று தரப்புக்களும் இணைந்து இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அநேக நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ள போதிலும் பணியாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட முடியாது என சரத் அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த குழுவின் தலைவராக தொழில் அமைச்சர் கடமையாற்றுவதுடன் குழுவின் பரிந்துரைகள் விரைவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: