அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பில் கள ஆய்வு!

Friday, May 12th, 2023

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு நிதிமூலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களின் முன்னேற்ற நிலைகளை கண்டறிவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்-கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அவரது  பிரத்தியேக உதவியாளர் இணைப்பாளரின் ஏற்பாட்டில் அலுவலக உத்தியோகத்தரால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நேற்றையதினம் கரைச்சி வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கதினால் இயக்கப்படும் வெதுப்பகம், எண்ணெய் ஆலை மற்றும் அரிசி ஆலை என்பனவும், கரைச்சி தெற்கு அரிசி ஆலை, உருத்திரபுரம் கிழக்கில் செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

இதன் போது இந்த வேலைத்திட்டங்களில் காணப்பட்ட மந்தநிலை மற்றும் குறைபாடுகள் இனங்காணப்பட்டு அவற்றை நிவர்த்திசெய்வதற்கான யோசனைகள் அடங்கிய் முழுமையான அறிக்கை ஒருங்கிணைப்புக் குழு தலைவருக்கு சமர்பிக்கப்படவுள்ளது.

இதே போன்று இனிவரும் நாட்களில் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட  ஏனைய பல செயற்றிட்டங்களை நேரில் பார்வையிட்டு ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்கு முழுமையான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுமென ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் பிரத்தியேக இணைப்பாளர் றுஷாங்கன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: