அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

Friday, May 3rd, 2024

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்றுமுதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இந்த வருடத்திற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை நிறைவுறுத்தி இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள்  எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: