அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் நாளை ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Sunday, July 23rd, 2023அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் நாளை திங்கள்கிழமை ஆரம்பித்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதிவரை இடம்பெறும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த மாதம் 18 ஆம் திகதிமுதல் 27ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் அடுத்த மாதம் 28ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மாதம் 27ஆம் திகதி வரையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிமுதல் நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறும்.
அத்துடன் மூன்றாம் தவனை கற்றல் செயற்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அதேநேரம், எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதிமுதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|