அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி!

Thursday, May 7th, 2020

இலங்கையின் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலர்களை வர்த்தக கடனாக வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வதற்காகவே இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடனுதவியை கொண்டு என் 94 தர மருந்துவ முகக்கவசங்கள், சத்திர சிகிச்சை முகக்கவசங்கள் மற்றும் கொரோன தொற்றாளிகளுக்கான மருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னிலை பணியாளர்களுக்காகவே இந்த மருந்துக்களும், உபகரணங்களும் தேவைப்பட்ட நிலையில்  ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்தக் கடன் உதவி  கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: