அரச மருத்துவ அதிகாரிகளது வேலை நிறுத்தத்திற்கு முகம் கொடுக்க தயார் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Wednesday, November 30th, 2016

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இன்று(30) முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை முகம் கொடுக்க சுகாதார அமைச்சு தயார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கவுள்ள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் முழுமையான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவில்லையெனவும் அமைச்சர் கூறியுள்ளார். இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அதாவது நேற்று(29) நண்பகல்தான் அச்சங்கம் தன்னிடம் அறிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தை ஊடாக தீர்வைத் தேட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

3-57

Related posts: