அரச மருத்துவர்கள் முன் அறிவித்தல் இன்றி பணிப்பகிஷ்கரிப்பு!

தனியார் மருத்துவக் கல்லூரியின் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வொன்றை முன்வைக்க அரசாங்கம் தவறுமாயின் முன் அறிவித்தல் இன்றி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கம் சைட்டம் பிரச்சினைக்கு உரிய தீர்வை முன்வைக்காவிடின் கட்டம் கட்டமாக பணிப்பகிஷ்கரிப்பை கடுமையாக்கவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஷா தெரிவித்துள்ளார்.
குறித்த இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 30 ஆம் திகதி இலங்கை மருத்துவ சபையின் தலைவர் மாற்றம் இடம்பெறவுள்ளது. இதுவரையில் அரசாங்கம் இப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காமல் இழுத்தடிப்பு செய்யும் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகவுள்ளது.
Related posts:
கிளிநொச்சியில் பாடசாலையில் இருந்து இடைவிலகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - நடவடிக்கை எடுக்குமா...
21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும், பொதுசன வாக்கெடுப்...
பாடசாலை நிகழ்ச்சிகளுக்கு மாணவர்கள் சமுகமளிக்காத நிலைக்கு கல்வி நிலையங்களே காரணம் - யாழ். வலயக் கல்வி...
|
|