அரச பல்கலைக்கு செல்ல முடியாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் -அமைச்சர் திஸாநாயக்க!

Sunday, February 5th, 2017

பல்கலைக்கழக மாணவர்களும், மருத்துவர்களும் முன்னெடுக்கும் போராட்டம் தவறானது என அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல்கலைக்கழக கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாத அப்பாவி பிள்ளைகள், வெளிநாடுகளுக்கு செல்லாமல் வங்கிக் கடனொன்றைப் பெற்றுக்கொண்டு நமது நாட்டிலேயே பட்டபடிப்பை பூர்த்தி செய்ய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது எமது கடமை.

சர்வதேச பாடசாலைகளில் 4 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கல்வி பயில்கின்றனர் என்பதை மறக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள அமைச்சர், அங்கு கல்வி பயிலும் அனைவரும் செல்வந்தர்கள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் ஒருவர் கூட அரசாங்க பல்கலைகழகங்களுக்கு செல்ல முடியாது. அப்படியாயின், அவர்கள் பட்டப்படிப்பை பெறுவதற்கான இடமொன்றை உருவாக்க வேண்டும்.

இந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்களும், மருத்துவர்களும் முன்னெடுக்கும் போராட்டம் தவறானது என அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.

s-b-dissanayake

Related posts: