அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம்!

Wednesday, July 11th, 2018

அரசாங்க சேவையில் உள்ள பதவி நிலை உத்தியோகத்தர்களின் தொழில்சார் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று நாடு தழுவிய ரீதியில் சுகவீன லீவுப் போராட்டமொன்றை மேற்கொள்கின்றனர்.

அரசாங்க சேவையில் உள்ள பதவி நிலை உத்தியோகத்தர்களின் சம்பளப் பிரச்சினைகள், நிறைவேற்றுக் கொடுப்பனவு என்பனவற்றில் ஏற்றத்தாழ்வான நிலை என்பன உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமென அரசாங்கத்தின் கவனத்திற்கு மேற்படி கூட்டமைப்பு கொண்டு வந்த போதிலும் அவற்றிற்கு இதுவரை தீர்வு காணப்படவில்லையென கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் மத்தும ஆராய்ச்சி அறிவித்துள்ளார்.

இச் சுகவீன லீவுப் போராட்டத்தில் இலங்கை திட்டமிடல் சேவை, இலங்கை பொறியியலாளர் சேவை, அரச ஆயுர்வேத மருத்துவ சேவை, அரச கால்நடை வைத்திய சேவை, அரச பல் வைத்தியர் சேவை, அரச விஞ்ஞான சேவை, இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை நில அளவையாளர் சேவை, இலங்கை விவசாய சேவை, இலங்கை ஆசிரிய கல்வியாளர் சேவை, இலங்கை உள்நாட்டு இறைவரி உத்தியோகத்தர் சேவை, இலங்கை பட வரைஞர் சேவை, இலங்கை தகவல் தொழில்நுட்பவியலாளர் சேவை ஆகிய சேவைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை மருத்துவ சேவை சங்கம், இலங்கை நிர்வாக அதிகாரிகள் சேவை என்பவற்றின் உத்தியோகத்தர்கள் இச்சுகவீன லீவுப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லைஎன தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்ட நடவடிக்கையிலும் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது

Related posts: