அரச பணியாளர்கள் பேஸ்புக்கால் நேரத்தை வீணடிப்பு!

Tuesday, October 4th, 2016

நாட்டில் பெருமளவான அரச பணியாளர்கள் தமது அதிகளவான நேரத்தை பேஸ்புக் மற்றும் இணையத்தளங்களில் செலவிடுவதாக பிரதி அமைச்சர் வைத்தியர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அதிகளவான இளைஞர், யுவதிகள் அரசாங்க தொழிலையே எதிர்பார்ப்பதாகவும், இது தொடர்பில் தனக்கு ஒரு நாளைக்கு 50இற்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வரும் அழைப்புக்கள் தமக்கு அரச அலுவலகங்களில் சாதாரண கூட்டும் தொழிலையாவது பெற்றுத்தருமாரு கோருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனவே அரசாங்க பணிகளில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இளைஞர், யுவதிகளை அவர்களது திறமைக்கு ஏற்ற தகுதியான தொழில்களுக்கு அவர்களை திசை திருப்புவது கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலுமொரு வேலையை செய்ய வேண்டிய இடத்தில் 25 பேர் இருப்பதாலேயே எமது நாடு முன்னேற்றம் அடையாமைக்கு முக்கிய காரணம் என்றும் பிரதி அமைச்சர் அனோமா சுட்டிக்காட்டியுள்ளார். இன்று தனியார் துறைகளில் அதிக வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாகவும், இதனூடாக தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள இளைஞர்களுக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

A-woman-views-her-profile-007

Related posts: