அரச நிறைவேற்று அதிகாரிகள் குழு தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்!

Tuesday, March 12th, 2019

அரச நிறைவேற்று அதிகாரிகள் நிறைவேற்று குழு அடுத்த வாரத்தின் பின்னர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்த குழுவின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய வேதன கொள்கையை மீறி அரசாங்கம் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தங்களது பிரச்சினைக்கு எதிர்வரும் ஒரு வாரகாலப்பகுதியினுள் தீர்வு கிடைக்க பெற வேண்டும். இல்லாவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச நிறைவேற்று அதிகாரிகள் குழுவின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார்.

Related posts: