அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறையை துரிதப்படுத்த நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்திற்கு தேவையான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையர்களின் ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம் – திருத்தியமைக்கப்படுகிறது ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் ...
யாழ்ப்பாணக் கலைஞர்களுக்கு ஊக்குவிப்பு உதவி வழங்கல்!
பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுக...
|
|